தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், டவுன் ஜாமியா சுன்னத்லல் ஜமாஆத் பள்ளிவாசல் சார்பாக 25.07.2014 அன்று மாலை சமத்துவ நல்லிணக்க இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், ஜெரோம் ஐ.ஆர்.எஸ், டாக்டர் என்.டி.சீனிவாசன், எம்.அந்தோணிசாமி, எம்.பரமசிவம், பி.ஆர்.தனராஜ் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
25 ஆண்களுக்கும், 50 ஏழை பெண்களுக்கும், வேஷ்டி, சேலைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
ஜமாத் தலைவர் உதுமான் அலி, செயலாளர் அமானுல்லாகான், பொருளாளர் ஹம்சத் பாஷா இமாம், மௌலவி அப்துல் ரஷீத், ஷேக் அப்துல் காதர், பிஸ்மில் சேட், டாக்டர் ஹனீபா, சாரா ஹக்கீம், அலாவுத்தீன் இப்ராஹீம், ஜாபர்தீன், பீர் பாஷா, ஹனீபா, சின்னமியான் மற்றும் அல்லாபிச்சை, முன்னாள் இமாம் ஹாஜி அபுல்காசிம் பலர் கலந்து கொண்டனர். மாலை 6.45 மணியளவில் இஃப்தார் நோன்பு திறக்கப்பட்டது.
-கோ.சரவணக்குமார்.