சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள புகழ் பெற்ற மாண்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 98 -ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று (26.07.2014) நடைப்பெற்றது.
புனித மாண்ட்போர்ட் கபிரியல் சபை துணை தலைவர் அருட்சகோதரர் யுவன் பாசிபான் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். காலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்புடன் விழா துவங்கியது. பின்னர் பள்ளியின் பழைய மாணவர்களின் அணி வகுப்பு நடைப்பெற்றது. பின்னர் நீச்சல், ஓட்டம் ஆகிய பந்தயங்கள் நடைப்பெற்றது.
பிற்பகல் கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் பரிசளிப்பு விழா துவங்கியது. விழாவில் ஆதிவாசி நடனம், ஸ்பைடர்மேன் நடனம், வளைய நடனம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள் பார்வையாளர்களின் கண்களை கவர்ந்தன.
கபிரியல் சபை உதவி தலைவர் கே.எம்.ஜோசப் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். ஏற்காடு மண்டல சபை தலைவர் கே.ஜே.ஜார்ஜ் தனி நபர் சாம்பியனுக்கான பரிசுகளை வழங்கினார்.
-நவீன் குமார்.