தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுப்பது இந்து மத மக்களின் வழக்கம். இன்று (26.07.2014) ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் கூட்டம் அலைமோதியது.
பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்துதான் தம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கின்றனர்.
இந்த ஆண்டு காவிரியில் நீரில்லாத நிலையில். திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு முயற்சி மேற்கொண்டு குழாய்கள் அமைத்து நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். மக்கள் சிறப்பான முறையில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். காவல்துறை சிறந்த முறையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
-ஆர்.பி.சங்கர ராமன்.