கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி கல்லூரி பட்டமளிப்பு விழா!

DSCF0692தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதி பாடப்பிரிவுகளின் 17-வது பட்டமளிப்பு விழா இன்று (26.07.2014) பிற்பகல் 3.00 மணியளவில் என்.தாமோதரன் நினைவுக் கலையரங்கத்தில் நடைபெற்றது.

கல்லூரிச் செயலர், கல்லூரி முதல்வர், இயக்குநர், சிறப்பு விருந்தினர் மற்றும் துறைத்தலைவர்கள் பட்டமளிப்பு விழா அங்கியுடன் பாரம்பரிய மரபுடன் விழா மேடையில் அமர்ந்த பின்பு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது.

கல்லூரிச் செயலர் கே.செல்வராஜ், தலைமையேற்று விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார். சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குநர், பேராசிரியர் கு.வெங்கடாசலபதி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் கல்லூரியின் ஆண்டறிக்கையினை வாசித்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக சாத்தூர் இராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியின் முதல்வர் முனைவர் வீ.பிரேம்குமார் பற்றி அரசு உதவிபெறும் கல்லூரியின் வணிகவியல் துறைப் பேராசியர் சு.கிருஷ்ணசாமி, சிறப்பு விருந்தினர் பற்றி அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் சிறப்பு விருந்தினர் மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கினார். அரசு உதவிபெறும் கல்லூரியின் விலங்கியல் துறைப் பேராசிரியை கு.ஆதிலட்சுமி உறுதிமொழியைப் படிக்க, பட்டம் பெற்றவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. இவ்விழாவில் 215 கல்லூரி மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.

-கோ.சரவணக்குமார்.