கடந்த வாரம் (ஜீலை16,17,18 தேதிகளில்) இலங்கையில் பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா, இலங்கை விமானப்படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும் என்ற உறுதியின் அடிப்படையில், இந்தியாவில் பயிற்சி பெறுவதற்காக இலங்கை விமானப் படைக் குழு ஒன்று இந்தியா வர இருப்பதாக தெரிகிறது. லக்னோவில் இந்த பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை படைத்தரப்புக்குப் பயிற்சிகளை வழங்க வேண்டாம் என்று தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
ஆனால், இலங்கை விவகாரத்தைப் பொருத்தவரை காங்கிரசு கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. காங்கிரஸ் கடைப்பிடித்து வந்த அதே நடைமுறைகளைதான் நரேந்திர மோதி தலைமையிலான அரசும் மேற்கொண்டு வருகிறது.
-எஸ்.சதிஸ்சர்மா.