எஸ்.ஏ.வி. பள்ளிகளின் பழைய மாணவர் சங்கம் தொடக்க விழா!

DSCF1785 DSCF1788சுமார் 162 வருட பழமை வாய்ந்த தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளிகளின் பழைய மாணவர் சங்கம் தொடக்கவிழா 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி எஸ்.ஏ.வி மேனிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.

தலைமையாசிரியர் பன்னீர் செல்வம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் பழைய மாணவரும், சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதியுமாகிய சொக்கலிங்கம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் மாநகரின் முக்கியப் பிரமுகர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

-பொ.கணேசன் @ இசக்கி.