திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த முறையாறு வாம் தொண்டு நிறுவனத்தில் உள்ள ஆதரவற்றோர், முதியோர், மாணவ, மாணவிகளுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரியாணி விருந்தும், இனிப்புகளும் வழங்கப்பட்டது. பா.ஜக. சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சையத்கலில் ஏற்பாடு செய்த விழாவில், பா.ஜ.க.மாவட்டசெயலாளர் இறைமாணிக்கம் இனிப்புகளையும், பிரியாணியையும் வழங்கினார்
வாம் இயக்குநர் ராஜவேலு, சையத்முகமத், பிரச்சார அணி மாவட்ட தலைவர் உசேன், மகளிர் அணி பொதுசெயலாளர் பவுசியா, துரைசாமி, ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
– செங்கம் மா.சரவணகுமார்.