தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 27.07.2014 ஞாயிறு அன்று மூன்றாம் பிரிவு, தபால்காரர் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்கள் இணைந்து கூட்டு கோட்ட மாநாட்டை நடத்தினார்கள்.
மாநாட்டுக்கு கோட்டத் தலைவர் ஹெச்.சுவாமிநாதன் மற்றும் மாநில தலைவர் ஜி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தார்கள். இதில் புதிய நிர்வாகிகளாக மூன்றாம் பிரிவு சார்பில் தலைவராக எஸ்.பொன்னுசாமி, செயலாளர் ஏ.அருள்ராஜன், பொருளாளர் எல்.கேசவன் மறறும் நான்காம் பிரிவு சார்பில் தலைவராக ஜே.ஜான்சிராணி, செயலாளர் பெரியசாமி, பொருளாளர் முருகேசன் தேர்வு செய்யப்பட்டனர்.
7-வது ஊதிய குழுவில் ஜி.டி.எஸ் ஊழியர்களையும் இணைத்து சம்பள நிர்ணயம் செய்யப்பட வேண்டும், ஜி.டி.எஸ் ஊழியர்களுக்கும் பென்சன் வழங்கப்பட வேண்டும், 2004-க்கு பின் வந்தவர்களுக்கும் பென்சன் வழங்கப்பட வேண்டும், புதிய பென்சன் கைவிடப்பட வேண்டும், ஜி.டி.எஸ் ஊழியர்களின் சர்வீஸ் பென்சனுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
-கோ.சரவணக்குமார்.