திருச்சி, ஸ்ரீரங்கத்தில், ராகவேந்திரபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், ஏற்கனவே இருந்த வேகத்தடையும் நீக்கப்பட்டுள்ளதால், வாகனங்களின் அதிவேகத்தால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இது சம்மந்தமாக பலமுறை பகுதி மக்களின் சார்பில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து காவலரை நியமித்து நிலைமையை சரி செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
-ஆர்.பி.சங்கர ராமன்.