தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பநாடார் மேல்நிலைப்பள்ளியின் பசுமைப்படை மற்றும் பாரதியார் நினைவு அறகட்டளை சார்பில் இன்று (29.07.2014) உலக புலிகள் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் எம்.ராமசசந்திரன் தலைமை தாங்கினார். பாரதியார் நினைவு அறக்கட்டளையின் நிறுவனர் பி.முத்துமுருகன், ரோட்டரி சங்கத் துணைத் தலைவர் ஏ.ஜெயபிரகாஷ் நாரயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியை சுசிலா வரவேற்புரை ஆற்றினார்.
முனைவர்.பி.முத்துகிருஷ்ணன், முனைவர். ரவிமுருகன் கருத்துரை வழங்கினார்கள். பரமேஸ்வரன், செந்தில்குமார், வீராச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ரோட்டரி சங்க தலைவர் பரமேஸ்வரன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். நிறைவாக ஆசிரியர் வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார்.
பள்ளி மாணவர்கள் புலி வேடமிட்டு மற்ற மாணவர்களுடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக உலக புலிகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
-கோ.சரவணக்குமார்.