தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக முதல்வர் அவர்களின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 683 பயனாளிகளுக்கு ரூ.29.2 லட்சம் உதவித் தொகையை சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.
கோவில்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 28.07.2014 அன்று நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பின்னர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், 52 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகையும், 487 பேருக்கு கல்வி உதவித்தொகையும், 81 பேருக்கு திருமண உதவித்தொகையும், ஒரு நபருக்கு விபத்து நிவாரண உதவித்தொகையும், 36 பேருக்கு நலிந்தோர் நல உதவித்தொகையும், 26 பேருக்கு தற்காலிக உடல் திறனற்ற காலத்திற்கான உதவித்தொகையும் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.எம்.எல்.ஏ கடம்பூர் செ.ராஜு, நகர்மன்ற தலைவி ஜான்சி ராணி, நகர்மன்ற துணைத்தலைவர் ராமர், ஓன்றிய தலைவி பேச்சியம்மாள், துணைத்தலைவர் சுப்புராஜ், அ.தி.மு.க நகரச்செயலாளர் சங்கரபாண்டியன், அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன், கயத்தாறு ஒன்றிய துணைத்தலைவர் மாணிக்கராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை மாவட்ட செய்தி தொடர்பு மக்கள் உதவி அலுவலர் குமார் தொகுத்து வழங்கினார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜோதி நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
-கோ.சரவணக்குமார்.