திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியன் தலைமையில் ரவிச்சந்திரன், சுப்பிரமணி, தீஸ்வரன், வசந்தராஜ், சிவக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் குழு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் போளுர் ரோடு, பெங்களுர் ரோடு ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்கள் பேக்கரி சூப்பர் மார்கெட் மொத்தமளிகை வியாபாரம் குளிர்பான கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
இதில் காலாவதியான குளர்பானம், பிஸ்கேட், பான்மசாலா போன்றவற்றை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை செங்கம் குப்பை கிடங்கில் தீவைத்து அழித்தனர். மீண்டும் இது போன்ற பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுபாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.
– செங்கம் மா.சரவணகுமார்.