ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள ஏற்காடு வீட்டு வசதி சங்கத்திற்கு ஆறுமுகம் என்பவர் தலைவராகவும், ரமேஷ் என்பவர் செயலாளராகவும் உள்ளனர்.
ஏற்காடு வீட்டு வசதி சங்க அலுவலகம் கடந்த 17 நாட்களாக பூட்டி கிடக்கிறது. சங்க உறுப்பினர்கள் தினமும் அலுவலகத்திற்கு வந்து பூட்டி கிடப்பதை பார்த்து விட்டு ஏமாற்றத்தோடு செல்கின்றனர்.
இது குறித்து வீட்டு வசதி சங்கத் தலைவர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, அலுவலக ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தராததால் அவர்கள் விடுப்பில் சென்று விட்டதாகவும், செயலாளர் ரமேஷ் தான் அலுவலகத்தை திறந்து பார்த்து கொள்ள வேண்டும் என்றும், ஆனால், அவர் பத்திரம் எழுதும் கடை நடத்தி வருவதால் அலுவலகத்தை முறையாக திறப்பதில்லை என்றார்.
ஏற்காடு வீட்டு வசதி சங்க அலுவலகத்தை திறப்பதற்கு சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நவீன் குமார்.