ஏற்காடு, ஜெரீனாக்காடு எனும் பகுதியில் குமார் என்பவரின் வீட்டின் அருகே இருந்த பழமையான ராட்சத மரம் இன்று காலை அடியோடு சாய்ந்தது. இதனால் அருகில் இருந்த வீடு மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. நேற்று முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் தான் மரம் விழுந்ததாக கூறப்படுகிறது.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரியத்தினர், பல மணி நேரம் போராடி மின் கம்பிகளை சரி செய்தனர்.
-நவீன் குமார்.