சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள புனித ஜோசப் துவக்க பள்ளியின் 98 -வது ஆண்டு விழா இன்று (02.08.2014) பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
விழாவிற்கு ஏற்காடு பஞ்சாயத்து தலைவர் முரளி தலைமை தாங்கினார் , பள்ளி தாளாளர் அருட்சகோதரர் பிரிட்டோ லுர்துசாமி முன்னிலை வகித்தார். விழா பள்ளி மாணவர்களின் அணிவகுப்புடன் துவங்கியது.
மாணவர்களுக்கு, ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல பந்தயங்கள் நடைப்பெற்றது. நடனம், நாடகம் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பள்ளியின் பழைய மாணவர்கள் அணிவகுப்பு நடைப்பெற்றது.
பள்ளியில் ஒருவார காலமாக நடைப்பெற்ற கால்பந்து, கைப்பந்து, கூடைபந்து, உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர்களுக்கும் பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டது.
-நவீன் குமார்.