இன்று (03.08.2014) ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஏராளமான புது மணத்தம்பதியினர் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். பெண்கள் தங்கள் தாலிச்சரடை மாற்றியும், காவிரி தாய்க்கு விளக்கேற்றி வழிபட்டனர். காவல்துறை சார்பில் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களையும் பைகளையும் தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இன்று (03.08.2014) மாலை அருள்மிகு அரங்கநாதர் அம்மாமண்டபம் படித்துறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெறும்.
-ஆர்.பி.சங்கர ராமன்.