சேலம் மாவட்டம், ஏற்காடு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகும் இங்கு கேரளம், கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
இங்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் விரும்பி செல்லும் இடமாக இருப்பது படகு இல்லம் ஆகும். இங்கு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய அதிகப்படியான ஆர்வம் காட்டுவர்.
இந்த படகு இல்ல சாலையானது எப்போதும் அதிளவிலான வாகனங்கள் செல்லும் சாலையாகும். இதனால் ஏற்காடு யூனியனால் படகு இல்லத்திற்கு அருகில் கார்பார்க்கிங் ஒன்று கட்டப்பட்டு வருடா வருடம் கார் பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு வரி வசுலிப்பதற்காக தனியாருக்கு டெண்டர் விடப்படும்.
ஆனால், சுற்றுலா பயணிகள் இந்த கார் பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தாமல் படகு இல்ல சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். கார் பார்க்கிங்கை டெண்டர் எடுத்தவர்களும் வரி வந்தால் போதும் என்று இதை கண்டுகொள்வதில்லை.
இங்கு விடுமுறை நாட்களில் பணியமர்த்தப்படும் காவலர்களும் இதை கண்டு கொள்வதில்லை. இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த கார் பார்க்கிங்கிலேயே வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கலாம் என சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.
-நவீன் குமார்.