சர்வதேச தரகர் சுப்பிரமணியன் சுவாமி மீது, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு!

swamy_mahindaசர்வதேச மூத்த தரகர் சுப்பிரமணியன் சுவாமி மீது, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

sswamy.jpg twitter.bmp1

விடுதலைபுலி திலீபன் நினைவு நாளை கொண்டாட தமிழக காவல்துறை அனுமதி வழங்குகிறது. இதன்மூலம் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, தீவிரவாதிகளுக்கு நண்பனாக இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது என்று, தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி 11.09.2014 அன்று கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது இந்த கருத்து முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி மீது ஏற்கனவே இரண்டு அவதூறு வழக்குகளை, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in