அரிமா சங்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது!

DSCF8476 DSCF8457கோவில்பட்டியில் 16.09.2014 அன்று மாலை 6.00 மணியளவில் மந்தித்தோப்பு ரோட்டிலுள்ள ஜெயஸ்ரீ மஹாலில் கோவில் அரிமா சங்கத்தின் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோவில் அரிமா சங்கத்தின் தலைவர் ஆர்.பி.பாலசுந்தர் தலைமை தாங்கினார். கோவில் பட்டயத் தலைவர் ஜி.முருகேசன் முன்னிலை வகித்தார்.

அட்வகேட் கே.சந்திரசேகரன் அறிமுகவுரை ஆற்றினார். மாவட்ட கவர்னர் சிவகாமி.எஸ்.ஆறுமுகம் மற்றும் மாவட்ட முதல் பெண்மணி சரோஜம் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

முன்னதாக 60 மாணவ, மாணவியர்களின் மாறுவேடப் போட்டி நடைபெற்றது. பின்னர் சிப்பிபாறை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சி.சரவணன், கலிங்கப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சிறந்த ஓவியர் எஸ்.மோகன்குமார் சிறந்த ஓவிய ஆசிரியருக்கான விருது, 40 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. மாறுவேடப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் எம்.சண்முகசுந்தரம், எஸ்.ஆறுமுகம், எம்.சுதாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜி.முருகேசன் முன்னின்று நடத்தினார். பொருளாளர் ஆர்.செல்வஆர்த்தி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் அரிமா சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-கோ.சரவணக்குமார்.