ஏற்காடு தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்ரமணியம் தலைமையிலான வீரர்கள், ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே தீ விபத்துகளை தடுக்கவும், தீ விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி முகாம் நடத்தினர்.
இந்த முகாமை ஏற்காடு தாசில்தார் சாந்தி மற்றும் வி.ஏ.ஓக்கள் ராஜசேகர், செந்தில், மற்றும் வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
-நவீன் குமார்.