தமிழகத்தில் காலியாக உள்ள 2 மேயர் உட்பட 530 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 307 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவிகளையும், நான்கு நகர்மன்ற தலைவர் பதவிகளையும் அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க படுதோல்வியை சந்தித்துள்ளது.
-பி.கணேசன் @ இசக்கி.