கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்!

IMAGE .1திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். வேலூர் ஸ்ரீநாராயணி மருத்துவ ஆராய்ச்சி மையம், ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி, செங்கம் டவுன் லயன் கிளப் இணைந்து நடத்திய ரத்ததான முகாமிற்கு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார்.

செங்கம் டவுன் லயன் கிளப் மாவட்ட தலைவர்கள் சங்கர், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பிரமிளா ஜெயந்தி வரவேற்று பேசினார். முகாமில் கல்லூரி மாணவர்கள் 110 யூனிட் ரத்தம் தானம் செய்தனர். டாக்டர் நிர்மல்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு முகாமில் ரத்தம் சேகரித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

– செங்கம் மா.சரவணக்குமார்.