ஏற்காடு, வாழவந்தி கிராமத்தில் கொட்டச்சேடு செல்லும் மலைப்பாதையில் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலானது சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் தினசரி பூஜை நடந்து வருகிறது. இந்த வழியில் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இங்கு நின்று பூஜை செய்து செல்வது வழக்கமாகும்.
இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் இன்று (22.09.2014) இந்த கோவிலுக்கு சென்ற போது கோபுர கலசம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து, இது குறித்து ஏற்காடு காவல் நிலையத்திற்கு இன்று காலை 11 ம ணிக்கு புகார் தெரிவித்தனர்.
ஆனால், ஏற்காடு காவல் நிலையத்தில் இருந்த காவலர்களில் இருவர் தவிர, மற்ற அனைவரும் வாக்கு எண்ணும் பணிக்காக வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டதால் மதியம் 1 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த உதவி காவல் ஆய்வாளர் சின்னப்பன், மற்றும் தனிப்பிரிவு ஏட்டு மோகன் ஆகியோர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
பழமை வாய்ந்த கோபுர கலசங்களில் இருடியம் எனும் தனிமம் இருக்கும் என கருதி இருடியம் திருடும் கும்பலை சார்ந்த யாராவது கலசத்தை திருடியிருப்பார்களோ? என்று பொதுமக்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
-நவீன் குமார்.