கடத்தல் ஆசாமியிடம் பாஸ்வேர்ட் கேட்ட சிறுமி!

Passward Childபெங்களூரில் ‘சிறுமலர்’ என்கிற பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியிடம் முன்பின் தெரியாத ஒரு நபர், உன்னை அழைத்துவரசொல்லி உன்னுடைய அம்மா என்னை அனுப்பிவைத்துள்ளார். வா போகலாம் என்று சொல்லி கூப்பிட்டு இருக்கிறார்.

உடனே, அந்த சிறுமி , “password” சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்…., அதாவது முன்பின் தெரியாத யாராவது உன்னை அழைத்தால் இந்த password கேட்டு தெரிந்துகொண்டு செல்! என்று முன்னரே அவளுடைய தாயும், இந்த சிறுமியும் ஒரு password பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

சிறுமி password கேட்கவும் அந்த கடத்தல் ஆசாமி எஸ்கேப் ஆகிவிட்டான்.

அருமையான யோசனை அல்லவா இது? பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த முறையை உடனே அமல்படுத்துங்கள்.

-கோ.சரவணக்குமார்.