ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச நியூயோர்க் சென்றார்!

sl president mahinda newyork visite sl president mahinda newyork visite2sl president mahinda newyork visite1ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச நியூயோர்க் சென்றடைந்துள்ளார்.

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன், அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்சவும் சென்றுள்ளார். இவர்களை அங்குள்ள இலங்கை பிரதிநிதிகளான பாலித கோஹன, பிரசாத் காரியவசம் மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் வரவேற்றனர்.

ஐக்கிய நாடுகளின் 69-வது அமர்வில் பங்கேற்க சென்றிருக்கும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச, அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஒரு வாரக்காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் காலநிலை தொடர்பான அமர்வில் உரையாற்றவுள்ளார். நாளை அவர் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் உரையாற்றவுள்ளார்.

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சயுடன், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தவிர, மற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் என்று 15-க்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

-எஸ்.சதிஸ்சர்மா.