ஏற்காடு டவுன், ஜெரீனாக்காடு, லாங்கில் பேட்டை, முருகன் நகர், எம்.ஜி.ஆர்.நகர், நாகலூர், அசம்பூர், மஞ்சக்குட்டை, வெள்ளக்கடை உள்ளிட்ட பல இடங்களில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று (25.09.2014) மதியம் பெய்த பலத்த மழையால், சாலை ஓரங்களில் மழைநீர் ஆறு போல ஓடியது. வறண்டு கிடந்த ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட துவங்கியுள்ளது.
இதனால் இந்த ஆண்டு அனைத்துவித பயிர்களும் நன்கு விளைந்து அதிகளவில் மகசூல் கிடைக்கும் என மகிழ்ச்சி தெரிவித்தனர். நேற்று இரவு மற்றும் இன்று மதியம் ஏற்காட்டில் பெய்த மழை அளவு 46 மில்லி மீட்டராக பதிவாகி இருந்தது.
-நவீன் குமார்.