மகிந்த ராஜபக்சவை சந்தித்த நரேந்திர மோதி!

slmahinda-with-modi1 slmahinda-with-modi2
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை நியூயோர்க்கில் நேற்று (26.09.2014) சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில், 13-வது திருத்தச்சட்டம் குறித்துப் பேசவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேவேளை, இருதரப்பு விவகாரங்கள் குறித்தும், சம்பூர் அனல் மின் திட்டம், மீனவர்களின் பிரச்சினை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம் பெற்ற சந்திப்பு குறித்தும் பேசப்பட்டுள்ளதாக இந்திய வெளி விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-ஆர்.மார்ஷல்.