ஜெ.ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்காடு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி ஆகியோர் தலைமையில் ஏற்காடு பஸ் நிலையத்தில் இன்று 200-க்கும் மேற்ப்பட்ட அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
மேலும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டும் விதாமாக உண்ணாவிரத மேடையிலேயே 101 பேர் மொட்டையடித்து கொண்டனர்.
இதனிடையே ஏற்காடு ஒன்றிய துணை செயலாளர் ஜான்சி கணவர் ஆரிப்பால் சாலை நடுவில் படுத்துக்கொண்டு அம்மாவிற்காக உயிரை கொடுக்கிறேன் என்று கோஷமிட்டப்படி அவர் மீதே தீக்குச்சி கொழுத்திப்போட்டார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவரை தடுத்து அழைத்து சென்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக ஏற்காட்டில் உள்ள கடைகள் மற்றும் ஹேட்டல்கள் அடைக்கப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று கடைகள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.
-நவீன் குமார்.