ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க-வினர் சாகும்வரை உண்ணாவிரதம்!

DSCF8642 DSCF8643 DSCF8647
ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிரே அ.தி.மு.க-வினர் கருப்புத் துணி கட்டி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் அதிமுக நகரச் செயலாளர் சங்கரபாண்டியன், ஒன்றியச் செயலாளர் அய்யாத்துரைபாண்டியன் தலைமையில் நகர முன்னாள் செயலாளர்கள் முத்தையா, விஜயபாண்டியன், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் ஈஸ்வரபாண்டியன், அம்மா பேரவை அணி, நகர்மன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் அணி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட, எம்.ஜி.ஆர் மன்றம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, வழக்கறிஞர்கள் அணி, நகர மாணவரணி, நகர மகளிரணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, 36 வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள், மற்றும் பஞ்சாயத்து யூனியனுக்கு உள்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

-கோ.சரவணக்குமார்.