ஜெ.ஜெயலலிதா ஜாமீன் மனு அக்டோபர் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது! நீதிபதியாக ஏ.வி.சந்திரசேகரா நியமிக்கப்பட்டுள்ளார்!

Hon'ble Mr. Justice A.V.Chandrashekara

Hon’ble Mr. Justice A.V.Chandrashekara

karnataka high court karnataka high court1ஜெ.ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை 01.10.2014 காலை 10.30 மணியளவில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதி ரத்னகலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெ.ஜெயலலிதா சார்பாக வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார்.

ஜெ.ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்காமலேயே, வழக்கமான மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி விடுமுறை கால நீதிபதி ரத்னகலா அன்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், இம்மனு வரும் அக்டோபர் 7-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கு விசாரணை நீதிபதியாக ஏ.வி.சந்திரசேகரா நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் அக்டோபர் 16-ந்தேதி வருமானவரி வழக்கில் சென்னையில் ஜெ.ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்பதால், நிபந்தனை ஜாமீனில் நிச்சயம் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in