அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி கோவில்பட்டியில் அருகே உள்ள சிந்தலக்கரை அருள் தரும் காளிபராசக்தி தவசித்தர் பீடத்தில் அ.தி.மு.க.வினர் சார்பில் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
சிந்தலக்கரை தவசித்தர் இராமசாமி அடிகளார் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் செய்தார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கடம்பூர்.செ.ராஜூ முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், அதிமுக நகரச் செயலாளர் எஸ்.சங்கரபாண்டியன், ஒன்றியச் செயலாளர் அய்யாத்துரைபாண்டியன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக நெய்தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
-கோ.சரவணக்குமார்.