பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், தசரா தொடர் விடுமுறை என்பதாலும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இதனால் ஏற்காட்டில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. இவர்கள் ஏற்காட்டின் முக்கிய சுற்றுலா தலங்களான படகு இல்லம், மான் பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், சேர்வராயன் கோவில், பகோடா பாயிண்ட் உள்ளிட்ட பல இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
-நவீன் குமார்.