தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மேலூர் இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள வரதராஜபுரம் பகுதியில் மழை பெய்ததால் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
மேலும், சாக்கடை நீரும் இதனோடு சேர்ந்து தேங்கி சுற்றுப்புறச் சுகாதாரக்கேடு மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் இரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-பி.கணேசன் @ இசக்கி.