ஏற்காட்டில் தங்கள் லாரிகளை நிறுத்த தனி இடம் கோரி ஏற்காடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏற்காடு துணை தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
ஏற்காட்டில் 120 லாரிகளுக்கு மேலாக உள்ளன. இந்த லாரிகள் கடந்த மே மாதம் வரை ஏற்காடு திரையரங்கத்திற்கு பின்புறம் நிறுத்தி வந்தனர். அப்போது கோடைவிழவின் நாய் கண்காட்சி அங்கு நடத்த வேண்டும் எனக் கோரி மாவட்ட நிர்வாகத்தினால் லாரிகள் அகற்றப்பட்டது. பின்னர் அங்கு லாரிகள் நிறுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
அதானால் லாரிகளை அதன் உரிமையாளர்களை ஏற்காடு படகு இல்ல சாலையின் இறு புறமும் நிறுத்தி வந்தனர். இதனால் படகு இல்ல ஏரியின் அழகை ரசிக்க முடியாமலும், போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஏற்காடு வந்த கோட்டாட்சியர் லலிதாவதி, மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி ஆகியோர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை செய்து லாரிகளை அகற்றினர். உடனடியாக லாரி உரிமையாளர்கள், லாரிகளை சந்தை வளாகத்தில் நிறுத்தினர்.
எனவே, ஏற்காடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் அதன் தலைவர் பவுல்ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்ப்பட்டோர் ஏற்காடு தாலுக்கா அலுவலகத்தில் துணை தாசில்தார் ஜெயவேலிடம் தங்கள் லாரிகளை நிறுத்த தனி இடம் கோரி மனு ஒன்றை அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட துணை தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
-நவீன் குமார்.