தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் 11.10.2014 அன்று ஐந்து கருட சேவை பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளையும், கருடாழ்வாரையும் கோயில்களில் சென்று வழிபடுவது சிறப்பாகும்.
அந்த வகையில் தமிழகத்தைப் பொறுத்தவரை வேறெங்கும் இல்லாத சிறப்பாக தூத்துக்குடி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீரெங்கநாதபெருமாள், ஸ்ரீவரதராஜபெருமாள், ஸ்ரீவைகுண்டபதி பெருமாள், ஸ்ரீகல்யாண ஜெகன்நாத பெருமாள், ஸ்ரீவெங்கடாஜலபதி பெருமாள் ஆகியோர் ஐந்து கருட வாகனத்தில் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
-பி.கணேசன் @ இசக்கி.