ஏற்காட்டில் இருந்து செங்காடு, கீரைக்காடு, வாழவந்தி உள்ளிட்ட கிராமங்களை கடந்து கொட்டச்சேடு கிராமத்திற்கு இன்று (14.10.2014) மாலை 5.05 மணிக்கு செல்ல வேண்டிய அரசு பேருந்து ஆயில் லீக் என்பதால் பழுதாகி ஏற்காடு பேருந்து நிலையத்திலேயே நின்று விட்டது.
மாலை நேரம் என்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வோர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயினர். மழை என்பதால் பஸ்சினுள் அமர்ந்திருந்தனர். இந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அடுத்த பேருந்து இரவு 11 மணிக்குதான் என்பதால் அவதிக்குள்ளாகினர்.
இது போன்ற சமயங்களில் மாற்று பேருந்துகள் உடனடியாக அனுப்ப வேண்டிய டைம் கீப்பரும் இல்லாததாலும், டைம் கீப்பர் அலுவலகம் பூட்டி கிடந்ததாலும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். டைம் கீப்பர் அலுவலகம் கடந்த சில மாதங்களாகவே பூட்டிக் கிடக்கிறது என்று பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் ஒருவர் கூறினார்.
-நவீன் குமார்.