திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் முருகன் கோயிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுபடவேண்டி அலகு குத்தி தேர் இழுத்தனர்.
செங்கம் ஒன்றிய அ.தி.மு.க. இலக்கிய அணி இணை செயலாளரும், மேல்பள்ளிப்பட்டு கூட்டுறவு சங்க தலைவருமான சங்கர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தார்.
இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.ஆர் தருமலிங்கம், மாவட்ட பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன், ஒன்றிய செயலாளர் மதியழகன், ஒன்றிய குழு தலைவர் கணேசன், தலைமைக்கழக பேச்சாளர் வெங்கட்ராமன், பேரவை மாவட்ட துணைத்தலைவர் பன்னீர், பேரூராட்சி துணைத்தலைவர் பார்த்தசாரதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் செல்வசேகர் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
–செங்கம் மா.சரவணக்குமார்.