திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம், மேல்வணக்கம்பாடி கிராமத்தில் பெருமாள் கோயில், விநாயகர் கோயில், மாரியம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெ.ஜெயலலிதா விடுதலை பெறவேண்டி அ.தி.மு.க.வினர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாத விநியோகம், அன்னதானம் ஆகியவற்றுடன் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தி ஊர்வலம் சென்றனர்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வி.ஆர். பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி எ.என்.தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜரத்தினம் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் துணைத்தலைவர் அர்ஜூணன், கவுன்சிலர் சேட்டு, மேலவை பிரதிநிதி அயோத்தி, புன்னியகோட்டி, சேகர், ஜி.கிருஷ்ணன், பி.கிருஷ்ணன், ராஜமாணிக்கம், பழனி, குணசேகரன், பாலூர் ஏழுமலை, சத்தியமூர்த்தி, நாட்டார் முனுசாமி மற்றும் மகளிர் அணியினர் காவேரி, செல்வி, ராணி, துளசி, ஆனந்தஜோதி, காசியம்மாள் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், பொது மக்கள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் முடிவில் கிளைச்செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
-செங்கம் மா.சரவணக்குமார்.