டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் புதுப்பாளையம் பேருராட்சிகளில் நடைபெற்றன.
செங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு பேருராட்சி மன்ற தலைவர் சென்னாம்மாள் முருகன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர் டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்கள் விழிபுபுணர்வோடு செயல்பட வேண்டும் என்று விளக்கமளித்தார். பேருராட்சி மன்ற துணை தலைவர் பார்த்த சாரதி மற்றும் வார்டு உறுப்பினர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று புதுப்பாளையம் பேருராட்சியில் நடந்த கூட்டத்திற்கு பேருராட்சி மன்ற தலைவர் சித்ரா கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பேருராட்சி மன்ற துணை தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அண்ணாதுரை வரவேற்று பேசினார். புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தில்குமார் டெங்கு காய்ச்சல் குறித்து விளக்கமளித்தார்.
– செங்கம் மா.சரவணக்குமார்.