இந்திய பிரதமர் நரேந்திர மோதி இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சகம் எந்த தகவலையும் இலங்கைக்கு இன்னமும் வழங்கவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தின் தகவல் தொடர்பாளர் சத்யா ரொட்ரிகோ தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை இலங்கைக்கு வருமாறு இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். எனவே, இந்திய பிரதமர் நரேந்திர மோதி இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோதி இலங்கை விஜயம் செய்வது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சகம் எந்த விடயத்தையும் இலங்கைக்கு இன்னும் வழங்கவில்லை. தகவல்கள் வெளிவந்ததும் நாங்கள் அறிவிப்போம் என்றார்.
இலங்கைக்கு இறுதியாக கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமராக இருந்த மன்மோகன்சிங் வருகை தந்தார்.எனி்னும் அவர் இருதரப்பு விஜயமாக வரவில்லை. இலங்கையில் இடம்பெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவே வந்தார்.
-எஸ்.சதிஸ்சர்மா.