ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மண் ஊறியுள்ளது. இந்நிலையில் ஏற்காடு தலைச்சோலை கிராமத்தில் சாலையோரமாக இருந்த 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுக்கு மரம் 21.10.2014 அன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் விழுந்தது.
மரம் மின் கம்பிகள் மேல் விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. மின் கம்பமும் உடைந்து விழுந்தது. பின்னர் 10 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய ஊழியர்களும் கிராம மக்களும் இணைந்து மாலை வரை போராடி மின் இணைப்பை சீர் செய்தனர். அது வரை தலைச்சோலை கிராம மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.
-நவீன் குமார்.