இலங்கைக்கு இரண்டு ரோந்துக் கப்பல்கள் வழங்க இந்தியா திட்டம்!

gothapaya1indian navy shipsஇலங்கைக்கு கடலோர ரோந்துக் கப்பல்கள் இரண்டையும், இராணுவ உபகரணங்களையும் வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

இலங்கையுடனான பாதுகாப்பு உறவைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதுதொடர்பாக புதுடெல்லி வந்துள்ள இலங்கைபாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

-ஆர்.அருண்கேசவன்.