கனடாவில் பாராளுமன்றம் உட்பட மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு! (படங்கள்)

canada Parliament buildingscanada parliment3 canada parliment1 canada parliment2canada parlimentf canada parliment5 canada parliment6 canada parliment4canada parlimentscanada parlimentகனடாவில் 22.10.2014 புதன்கிழமை காலை தேசிய போர் நினைவகத்தில் ஒரு படைவீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை சுட்ட நபர் அங்கிருந்து நகரத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற கட்டிடதிற்கு ஓடி, அங்கு சட்ட அமுலாக்க அதிகாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கனடா பாராளுமன்றத்திற்குள்ளும் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

canada parliment7துப்பாக்கி பிரயோகம் பாராளுமன்ற ஹில் மாவட்டத்தின் 3-இடங்களில் நடைப்பெற்று இருக்கிறது. அப்பகுதியில் உள்ள ரிடேயூ மையம் என்ற ஷாப்பிங் சென்டருக்கு அருகிலும் துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற பகுதிகளை சுற்றிவளைத்து பொலிசார் சந்தேக நபர்களை தேடிவருகின்றனர்.

ஒட்டாவா நகர டவுன்ரவுன் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் போலிசார் வெள்ளம் போல் நிரம்பியுள்ளனர்.

இச்சம்பவத்தில் எத்தனை சந்தேக நபர்கள் அடங்கியுள்ளனர் என தெரியவில்லை. குறைந்தது மேலும் இரண்டு துப்பாக்கி பிரயோக நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

கனடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பர் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவர் பங்கு கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

-ஆர்.மார்ஷல்.