திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மீனாகுமாரி புருஷோத்தன் தலைமை தாங்கினார்.
ஆணையாளர் ராகவேந்திரராவ், வட்டார வளர்ச்சி அலுவலர் பரிதிமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் ராஜேஸ்வரி சுந்தரமூர்த்தி வரவேற்று பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பி.பி. முருகன் தீர்மானங்களை வாசித்தார்.
2014-2015-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் ரூ.41 லட்சம் மதிப்பில் தேர்வு செய்யப்பட்டது மற்றும் பல்வேறு செலவினங்கள் உட்பட 10 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் நன்றி கூறினார். கூட்டத்தில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
-செங்கம்.மா.சரவணக்குமார்.