தூத்துக்குடி மாநகரை தூய்மையாக்கும் நிகழ்ச்சி, தூத்துக்குடி அகில இந்திய தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகளின் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் திடலில் இன்று காலை 7 மணியளவில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாநகர மேயர் அந்தோணி கிரேஸி, மாநகராட்சி ஆணையாளர் மதுமதி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைவர் உபேந்திர கமாத், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ், தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி, தூத்துக்குடி நகர ஹோட்டல் உரிமையளார்கள் சங்கத் தலைவர் செந்தில் ஆறுமுகம், அகில இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜா சங்கரலிங்கம் மற்றும் தூத்துக்குடி நகரின் முக்கியப் பிரமுகர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தினர்.
-பி.கணேசன் @ இசக்கி.