அமெரிக்கவாழ் இந்தியரை, சுவீடன் நாட்டு அமெரிக்க தூதராக நியமித்த ஒபாமா!

Sweden-ambassadorகலிபோர்னியாவை தலைமையகமாக கொண்ட முன்னாள் முதலீட்டு வங்கியாளரான ராஜி, 2012-ல் ஒபாமாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நிதிதிரட்டலில் துணைத் தலைவராக பதவி வகித்தார். ஒபாமாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்கு 500,000 அமெரிக்க டாலரை ராஜி அதிகரித்தார்.

வெள்ளை மாளிகை உதவித்தொகை அதிபர் கமிஷனில் உறுப்பினராகவும் அஜிதா ராஜி கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து உள்ளார். ஒபாமாவின் நிர்வாகத்தில் பல்வேறு முக்கிய பணிகளை அஜிதா ராஜி திறன்பட செய்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கவாழ் இந்தியரான அஜிதா ராஜியை, சுவீடன் நாட்டிற்கான அமெரிக்க தூதராக, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நியமனம் செய்துள்ளார்.

அஜிதா ராஜி பர்னார்ட் கல்லூரியில் பி.ஏ.பட்டம் பெற்றார். பின்னர் கலிபோர்னியா மேலாண்மை பள்ளியில் எம்.பி.ஏ.பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஆர்.மார்ஷல்.