கடந்த 2007-ம் ஆண்டு ஈரானை சேர்ந்த ரெய்ஹென்னா ஜாப்ரி (Reyhaneh Jabbari Age-26) என்ற பெண்ணை, ஈரானிய உளவுத்துறை அதிகாரி மற்றும் மருத்துவரான மொர்டிஜா அப்டோலாலி சர்பாண்டி(Mortega abtolaali sarbanthi) கற்பழிக்க முயன்றுள்ளார்.
அப்போது தன்னை காத்துக்கொள்ள ஜாப்ரி, மொர்டிஜாவை கொலை செய்ததால் இவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இவர், கடைசியாக தனது தாயாருக்கு உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், என்னுடைய உடலை மண்ணில் புதைக்க வேண்டாம், ஏனெனில் எனது கல்லறையில் வந்து தாயார் அழுவதை நான் விரும்பவில்லை.
மேலும், எனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுங்கள். ‘ஐ லவ் யூ அம்மா’ என்று அக்கடிதத்தில் ரெய்ஹென்னா ஜாப்ரி எழுதியுள்ளார்.
-ஆர்.மார்ஷல்.