தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீசெண்பகவல்லிஅம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீபூவனநாதவாமி திருகோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை நடைபெற்றது.
பின்னர் காலை 10.00 மணிக்கு சண்முகர் சமேத வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு காந்தி மைதானத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி பூவலிங்கம், தலைமை எழுத்தர் ராமலிங்கம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (அக்.30) வியாழக்கிழமை மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதுபோன்று கோவில்பட்டி சொர்ணமாலை கதிர்வேல் முருகன் கோவில், பழனி ஆண்டவர் கோவில் மற்றும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில், கயத்தாறு திருநீலகண்ட ஈஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது.
-கோ.சரவணக்குமார்.