ஏற்காடு பட்டிப்பாடி வேலூர் கிராமத்தில், கடந்த மாதம் 23.09.2014 அன்று கனமழை பெய்ததால் 7 ஆடுகள் இடி தாக்கி இறந்தது. இதுகுறித்து நமது ‘உள்ளாட்சித் தகவல்’ ஊடகத்தில் ‘இடித்தாக்கியதில் 7 ஆடுகளும், கருவில் இருந்த 2 குட்டிகளும் பலி! – ஏற்காட்டில் நடந்த பரிதாபம்!’ என்ற தலைப்பில் 25.09.2014 அன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில், இடி தாக்கி இறந்த ஆடுகளுக்கு நிவாரண தொகை ரூபாய் 14,000-க்கான காசோலையை அதன் உரிமையாளர் சின்னதாயிக்கு, ஏற்காடு தாசில்தார் சாந்தி இன்று (30.10.2014) வழங்கினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் உடனிருந்தார்.
-நவீன் குமார்.