இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30–வது நினைவு நாள். ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு தினத்தில் பிரதமர், மத்திய மந்திரிகள் இந்திரா காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். மாநில அரசுகள் சார்பில் கொடுஞ்செயல் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால், இந்த ஆண்டு இந்திரா காந்தி நினைவு நாளை மத்திய அரசு புறக்கணித்தது. இன்று இந்திராகாந்தி நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சமாதியில் அரசு பதவியில் உள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி அமித் அன்சாரி ஆகிய இருவர் மட்டும் அஞ்சலி செலுத்தினார்கள். பிரதமர் நரேந்திரமோதி, மத்திய மந்திரிகள் யாரும் அஞ்சலி செலுத்தாமல் புறக்கணித்தனர்.
பிரதமர் நரேந்திரமோதியும், மத்திய மந்திரிகளும் இன்று காலை டெல்லியில் சர்தார்பட்டேல் பிறந்த நாளையொட்டி நடந்த தேச ஒற்றுமை ஓட்டத்தில் கலந்து கொண்டனர். பட்டேல் படத்துக்கும் பிரதமர் நரேந்திரமோதி மரியாதை செலுத்தினார்.
ஆனால் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படத்துக்கு, நரேந்திரமோதி தலைமையிலான மத்திய அரசு மரியாதை செலுத்தவில்லை.
-கோ.லெட்சுமிநாராயணன்.